First Ship Tunnel பொது அறிவு செய்திகள்
ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த நார்வேயின் ஸ்டட் தீபகற்ப கடற்பகுதி கொந்தளிப்பான வானிலைக்கும், ராட்சத அலைகளுக்கும் புகழ் பெற்ற பிரதேசமாகும் . இந்த பகுதியில் கப்பல்களின் பயணநேரத்தை குறைத்து, அவற்றின் பாதுகாப்பை மேம்படுத்தும் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுவருகின்றது .
மிகவும் பலம் கொண்ட பாறைகளாலான இந்த தீபகற்பத்திற்கு உள்ளே அடியாழத்தில் ‘உலகின் முதல் கப்பல் சுரங்கம்’ (The world’s first ship tunnel) உருவாக்கப் பட்டுள்ளது.
ஆழ்கடலில் இருந்து சற்று தூரத்தில் , அமைதியான இரண்டு கடற்பகுதிகளுக்கு இடையில் குறித்த சுரங்கம் குடையப்பட்டுள்ளது. இந்த கப்பல் சுரங்கம் வழியாக 20 ஆயிரம் டன் எடையுள்ள கப்பல்கள் வரை செல்ல முடியும்.
உலக அளவில் கப்பல்கள் செல்ல பிரமாண்ட கால்வாய்கள் இதற்கு முன்பு வெட்டப்பட்டிருந்தாலும், கப்பல்கள் செல்லக் கூடிய சுரங்கம் அமைக்கப்படுவது உலகிலேயே இதுவே முதல் முறை என்கிறது நார்வே.
இந்த சுரங்கத்திற்காக சுமார் எண்பது லட்சம் டன் கற் பாறை வெடிவைத்து தகர்த்து எடுக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு முழுமையடைந்த இந்த கப்பல் சுரங்கம், இப்போது பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
Kidhours – First Ship Tunnel
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.