Friday, November 15, 2024
Homeசிறுவர் செய்திகள்முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதுபானக்கடை எந்த நாட்டில் தெரியுமா? First Liquor Shop

முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மதுபானக்கடை எந்த நாட்டில் தெரியுமா? First Liquor Shop

- Advertisement -

First Liquor Shop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் தனது முதல் மதுபானசாலையை திறக்க அந்நாடு தயாராகி வருகிறது.

குறித்த மதுக்கடையை முஸ்லிம் அல்லாத தூதர்களுக்கு மட்டுமே சேவை வழங்கும் நோக்குடன் சவுதி அரேபியா திறக்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, சேவையை பெற வாடிக்கையாளர்கள் கைபேசி செயலி மூலம் பதிவு செய்ய வேண்டும் என்பதுடன் வெளியுறவு அமைச்சகத்திடம் இருந்து அனுமதிக் குறியீட்டைப் பெற வேண்டும்.

- Advertisement -

இதேவேளை, அவர்கள் வாங்கும் மாதாந்திர மதுபான ஒதுக்கீட்டு விபரத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இஸ்லாத்தில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் தீவிர பழமைவாத முஸ்லிம் நாட்டை சுற்றுலா மற்றும் வணிகத்திற்காக திறக்க சவுதி இளவரசர் பின் சல்மான் தலைமையிலான அரசின் முயற்சிகளில் இந்த நடவடிக்கை ஒரு மைல்கல் ஆகும்.

எண்ணெய் ஏற்றுமதிக்கு பின்னரான ‘விஷன் 2030’ எனப்படும் பரந்த பொருளாதார திட்டங்களின் ஒரு பகுதியாகவும் இது உள்ளது.ஏனைய முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினர் மதுபான சாலையை அணுக முடியுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. மில்லியன் கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் வாழ்கின்றனர், ஆனால் அவர்களில் பெரும்பாலோர் ஆசியா மற்றும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள்.

First Liquor Shop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
First Liquor Shop  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

எதிர்வரும் வாரங்களில் மதுபானசாலை திறக்கப்படும் எனத் திட்டங்களைப் பற்றி நன்கு அறிந்த ஒரு வட்டாரங்கள் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவையிடம் உறுதிபடுத்தியுள்ளன.

சவுதி அரேபியாவில் மது அருந்துவதற்கு எதிராக கடுமையான சட்டங்கள் உள்ளன.

 

Kidhours – First Liquor Shop

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.