Fire Rain from Sky உலக காலநிலை செய்திகள்
பூமியில், நமக்கு விளங்காத மர்மங்களை கொண்டிருக்கும் பல இடங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் டானாகில் டிப்ரஷன் (Danakil Depression) என்ற இடம். இது வட ஆப்பிரிக்காவில் எத்தியோப்பியா என்ற நாட்டில் அமைந்துள்ளது. இங்கு பல சூடான நீரூற்றுகள் உள்ளன, எரிமலைகளும் உள்ளன. அதோடு மட்டுமல்ல இங்கு நெருப்பு மழையும் பெய்யுமாம்.
டானாகில் டிப்ரஷன் என்ற இடத்தில் அதிக அளவு பொட்டாசியம் உப்பு மற்றும் கந்தகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக, அதைச் சுற்றியுள்ள நிலம் சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை நிறமாக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல, இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால், டானாகில் டிப்ரஷன் கடல் மட்டத்திலிருந்து 125 மீற்றர் கீழே அமைந்துள்ளது இந்த இடத்தில் மூன்று டெக்டோனிக் ப்ளேட்டுகள் உள்ளன.
டெக்டோனிக் இயக்கம் காரணமாக, இந்த தட்டுகள் ஒவ்வொரு ஆண்டும் 1 அல்லது 2 சென்டிமீற்றர் தொலைவில் நகர்கின்றன. தட்டுகள் விலகுவதால் இங்கு விரிசல் வருகிறது. இதன் காரணமாக, பூமியின் உள்ளே இருந்து சூடான ‘ எரிமலை வெடிக்கிறது. சிறிது நேரம் கழித்து ஆழமான பள்ளம் தோன்றி, அதில் கடல் நீரை முழுமையாக நிரம்பி விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த காரணத்திற்காக, இந்த இடம் கேட்வே ஆஃப் ஹெல், அதாவது நரகத்தின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது.
Kidhours – Fire Rain from Sky
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.