Fire Incident 25 Dead சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவின் ஜியாங்க்ஷி மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபதொன்றினால் 25 பேர் உயரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜியாங்ஷி மாகாணத்தின் Yusui மாவட்டத்திலுள்ள வர்த்தக தொகுதியொன்றின் அடித்தளத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
விசாரணைகள் சம்பவம் தொடர்பில் தகவலறிந்த 120 மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் உடன் செயற்பட்டுள்ளனர்.
அதன்போது, தீவிபத்தில் சிக்கி சுமார் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரங்சாங்கம் உறுதிபடுத்தியுள்ளது.
![பயங்கர தீ விபத்து 25 பேர் பலி Fire Incident 25 Dead 1 Fire Incident 25 Dead சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/Untitled-design-2024-01-25T111049.995.jpg)
மேலும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறதாக கூறப்படுகிறது.அதேவேளை, முன்னதாக, கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு ஹெனான் மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Kidhours – Fire Incident 25 Dead
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.