Tamil Kids News Fire in Google சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கூகுள் டேட்டா சென்டரில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை அடுத்து மூன்று பேர் படுகாயமடைந்துள்ளதால் கூகுள் ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஐயோவா என்ற மாகாணத்தில் கூகுள் டேட்டா சென்டர் மிகவும் பிரமாண்டமாக உள்ளது.

இந்த சென்டரில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர், இந் நிலையில் கூகுள் டேட்டா சென்டரில் மின்கசிவு காரணமாக இன்று காலை தீ விபத்து ஏற்பட்டதாகவும் இந்த தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்ததாகவும் மூன்று பேர்களும் கூகுள் டேட்டா சென்டர் நிறுவனத்தின் ஊழியர்கள் என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மீட்பு படை மற்றும் தீயணைப்புத் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர் என்று கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் கூகுள் சியர்ஸ் சேவை தடை பெற்றுள்ளதாக பலர் குற்றம் சாட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Fire in Google
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.