Tamil Kids News Europe உலக காலநிலை
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான வடக்கு இத்தாலியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் வறட்சி நிலவி வருகின்ற நிலையில் போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து பகுதிகளில் இத்தாலி அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.
அதேசமயம் எமிலியா-ரோமக்னா, ஃப்ரியூலி வெனிசியா கியுலியா, லோம்பார்டி, பீட்மாண்ட் மற்றும் வெனெட்டோ ஆகிய பகுதிகளுக்கு தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க அவசரகால நிதியாக €36.5m (£31m; $38m) வழங்கப்படும் என கூறப்படுகின்றது.விவசாய சங்கமான கோல்டிரெட்டியின் கூற்றுப்படி, இத்தாலியின் விவசாய உற்பத்தியில் இந்த வறட்சி 30% க்கும் அதிகமானவற்றை பாதிக்கும் என கூறப்படுகின்றது.
![70 ஆண்டுகளில் இல்லாத கடும் வறட்சி ஐரோப்பியா Tamil Kids News Europe # World Best Tamil News 1 Tamil Kids News Europe](https://www.kidhours.com/wp-content/uploads/2022/07/Untitled-design-2022-07-05T223520.734.jpg)
அதேசமயம் குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் வழக்கத்திற்கு மாறான வெப்பமான வானிலை மற்றும் குறைந்தளவான மழை என்பன வடக்கு இத்தாலியில் தண்ணீர் பற்றாக்குறையை அதிகரிக்கிறது.“போ” என்பது இத்தாலியின் மிக நீளமான நதி, கிழக்கு நோக்கி 650 கிமீ (404 மைல்கள்) க்கு மேல் பாய்கிறது. இந்நிலையில் உப்பு கலந்த கடல் நீர் தற்போது ஆற்றில் கலப்பதால் பயிர்கள் நாசமாகி வருவதாக போ பள்ளத்தாக்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
அதேவேளை வார இறுதியில், வடக்கு இத்தாலிய ஆல்ப்ஸில் பனிப்பாறை சரிந்ததால் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
kidhours – Tamil Kids News Europe
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.