Eiffel Tower Facilities சிறுவர்களுக்கான உலக செய்திகள்
யுபிஐ (UPI) மூலம் பணம் செலுத்தும் நாடுகளின் பட்டியலில் பிரான்ஸும் இன்றையதினம் (02-02-2024) இணைந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள இந்திய தூதகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ-ன் சர்வதேச பரிமாற்ற அமைப்பும், பிரான்சின் பரிவர்த்தனைகள் அமைப்பும் இணைந்து இந்த அறிவிப்பை வெளியிட்டன.அதன்படி, இனி பிரான்ஸில் யுபிஐ பயன்படுத்தி பணம் செலுத்த இயலும். இனிமேல் பிரான்ஸ் செல்லும் இந்தியர்கள் யுபிஐ வாயிலாக பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும்.

இந்தியர்கள் இனி ஈபிள் டவரை பார்க்க வேண்டுமெனில் முன்கூட்டியே யுபிஐ மூலம் பணம் செலுத்தி ஓன்லைனில் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம். இதேவேளை, முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் திகழ்கிறது.
Kidhours – Eiffel Tower Facilities
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.