Economic Crisis in Japan சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக பொருளாதாரத்தில் தற்போது அமெரிக்கா முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாவது இடத்திலும் இருந்தன.
இந்த நிலையில் பொருளாதாரத்தில் ஏற்பட்ட மந்த நிலை காரணமாக தற்போது ஜப்பான் 3வது இடத்திலிருந்து சரிந்து 4வது இடத்திற்கு சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
மேலும் இந்தியா ஐந்தாவது தன்னை தக்கவைத்துக் கொண்டது.ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) முந்தைய காலாண்டில் 3.3% ஆக சரிவடைந்த நிலையில் கடந்த அக்டோபர்-டிசம்பர் காலண்டில் 0.4% சரிந்தது.
ஐ.எம்.எஃப் என அழைக்கப்படும் சர்வதேச நிதி கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு 4291 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என கணக்கிட்டுள்ளது.

அதே நேரத்தில் ஜெர்மனியின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4,730 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
இதனடிப்படையில் ஜப்பான் 4வது இடத்திற்கு சரிந்து ஜெர்மனி 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
Kidhours – Economic Crisis in Japan
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.