Tamil Kids News Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
வடக்கு ஜப்பான் பகுதியான ஃபுகுஷிமா கடற்கரையொட்டிய பகுதிகளில் 7.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது கடலுக்கு அடியில் 60 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஜப்பான் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில் ஜப்பானின் ஃபுகுஷிமா பகுதியில் 9.0 ரிக்டர் அளவிலான வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் தொடர்சியாக சுனாமியும் தாக்கியது. அதனால், ஃபுகுஷிமா அணுஉலை பாதிக்கப்பட்டு ஜப்பான் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொண்டது. ஃபுகுஷிமா பாதிப்பின் 11-வது ஆண்டை நினைவுகூர்ந்த ஒரு சில தினங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது ஜப்பான் மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மியாகி, ஃபுகுஷிமா மாகாணங்களில் 3 மீட்டர் அளவுக்கு சுனாமி பாதிப்பு ஏற்படலாம் என்று எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. சில பகுதியில் ஏற்கெனவே சுனாமி தாக்கியிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுமார் 20 லட்சம் வீடுகள் மின்சார வசதியை இழந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இன்னும், முழு பாதிப்புகள் குறித்து தெரியவில்லை.
kidhours – Tamil Kids News Earthquake
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.