Earth Quake in South Africa சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தென்னாபிரிக்காவின் ஜொஹன்னஸ்பேர்க் நகரில் உள்ளூர் நேரப்படி இன்று (11) அதிகாலை 2.38 மணியளவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜொஹன்னஸ்பேர்க்கின் தென்கிழக்கே உள்ள அல்பர்டனில் இருந்து 6 கிலோமீட்டர் (3.7 மைல்) தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.உயிரிழப்பு அல்லது குறிப்பிடத்தக்க சேதம் குறித்த எந்த தகவலும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
சுமார் ஒரு நிமிடம் நிலநடுக்கம் நீடித்ததாகவும், வீடுகளின் சுவர்கள் குலுங்கியதாகவும் நகர மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 2014 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள ஓர்க்னி என்ற தங்கச் சுரங்க நகருக்கு அருகில் 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Kidhours – Earth Quake in South Africa
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.