Tamil Kids News சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மோப்ப சக்தி மிக்க நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது பல ஆண்டுகாலமாக பல்வேறு நாடுகளும் பின்பற்றி வருகின்றன. மனிதர்கள் செல்ல முடியாத இடத்துக்கு அனுப்புவதும், சில ரகசிய நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்புகளுக்கு பயன்படுத்துவதிலும் நாய்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ரஷ்யாவில் தற்போது வானிற்கு அழைத்துச் சென்று புதிதாக பயிற்சி அளிக்கப்படுகின்றன. ராணுவ ஹெலிக்காப்டரில் அழைத்துச் செல்லப்படும் நாய்கள், பாராசூட்டில் நிபுணத்துவம் பெற்ற வீரர்களுடன் ஒன்றாக கட்டப்பட்டு அந்தரத்தில் பறக்க விடப்படுகிறது.
இந்த பயிற்சியானது சுமார் 13,000 அடி உயரத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
ராணுவ வீரர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சியைப் போலவே நாய்களுக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இது குறித்து ரஷ்ய பாதுகாப்புத்துறை தொலைக்காட்சி Zvezda வெளியிட்டுள்ள செய்தியில், நாய்களுக்கு அளிக்கப்படும் ராணுவ பயிற்சிகள் பாதுக்காப்பாகவும், வெற்றிகரமாகவும் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்துள்ளது. பயிற்சியில் ஈடுபடும் அனைத்து நாய்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்துள்ள ரஷ்யா, தற்போதைய பயிற்சிகளில் நல்ல நிலையை எட்டியிருப்பதாகவும் கூறியுள்ளது.
உத்தரவுகளை சரியாக பின்பற்றி, இலக்குகளை அடைவதாகவும் ரஷ்ய பாதுகாப்புத்துறை தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. மேலும், ராணுவ நடவடிக்கை பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் பாராசூட்கள் அனைத்தும் அதிபர் புதின் நேரடியாக மேற்பார்வையிட்டதாகவும் விளக்கமளித்துள்ளது. நாய்களுக்கு பாராசூட் பயிற்சி கொடுப்பது குறித்து பேசிய ரஷ்ய ராணுவ அதிகாரிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் மீட்பு பணிகளில் நாய்கள் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று எனக் குறிப்பிட்டனர். ஒவ்வொரு காலத்துக்கும் ஏற்ப பயிற்சிகள் மாறுபடும் எனக் கூறிய அவர்கள், எதிர்கால ராணுவ நடவடிக்கைகளுக்காக நாய்களுக்கு இந்த பாராசூட் பயிற்சி கொடுக்கப்படுவதாக தெரிவித்தனர்.
போர் பகுதிகளில் இலக்கு வைக்கப்பட்ட இடத்தில் சரியாக தரையிறங்கவும், ராணுவத்தின் ஆப்பரேஷன்களுக்கு ஏற்ப கட்டளைப் பெற்று அதற்கு தகுந்தாற்போல் செயல்படுவது குறித்தும் நாய்களுக்கு குறிப்புகள் பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தனர். பாராசூட் டெஸ்டிங் நிபுணர் ஆன்ரே தாபர்கோவ் பேசும்போது ரஷ்யாவின் ராணுவ பயிற்சிகளில் அண்மைக் காலமாக நாய்களுக்கு இதுபோன்ற பயிற்சி வழங்கப்படுவதாக தெரிவித்தார்.
வானத்தில் அந்தரத்தில் பறந்து நாய்களை கீழே கொண்டுவருவதில் தங்களுக்கு சவால்கள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அதனை ஹெலிகாப்டருக்குள் கொண்டு செல்வது சவாலாக இருப்பதாக கூறினார். ஒருமுறை ஹெலிகாப்டருக்குள் வந்தபிறகு அவை இயல்பாக இருப்பதாகவும், பயிற்சிகளை ரசித்து பயிற்சிகளை மகிழ்ச்சியாக மேற்கொள்வதாகவும் ஆன்ரே தாபர்கோவ் தெரிவித்தார். தனியாக குதிக்கும்போது சத்தமாக குறைப்பதாகவும், ராணுவ வீரர்களுடன் குதிக்கும்போது அவை அமைதியாக இருப்பதாகவும் ஆன்ரே கூறியுள்ளார்.
kidhours – Tamil Kids News
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.