Dog’s achievement சிறுவர்களுக்கான உலக செய்திகள்
உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகளில் ஏற மனிதர்களுக்கு அனுமதியில்லை என்றாலும் மனிதனால் சுற்றிப் பார்க்க முடியாத பிரமிடின் உச்சியில் ஏறி நாய் சுற்றி வரும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது
அதிசயத்தக்க பிரமீடுகளில் கிஸா பிரமிடு 450 அடி உயரம் கொண்டது. சிறிய குன்று போல இருக்கும் இந்த பிரமிடுகள் எகிப்தில் உள்ள 118 பிரமிடுகளில் இதுதான் பெரியது.
அவை பழமையான பாரம்பரிய சின்னமான பிரமிடுகளில் ஏறுவது தடை செய்யப்பட்டு உள்ளது.அதனால் மனிதர்கள் பிரமிடின் உச்சியை பார்ப்பது மிகவும் அரிது. ஆனால் அதன் உச்சியில் ஒரு நாய் ஏறிச் சென்று சுற்றிக் கொண்டிருந்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
NEW: Dog spotted hanging out on the top of the Great Pyramid of Giza in Egypt.
The man who filmed the incident from his powered paraglider says the dog was barking at birds.
The Great Pyramid of Giza is a whopping 450 feet tall meaning the dog had to take a long hike to… pic.twitter.com/flxq9oxgiQ
— Collin Rugg (@CollinRugg) October 16, 2024
குறித்த சம்பவத்தை பலூனில் பாராகிளைடிங் செய்த அலெக்ஸ் லாங்கால் என்பவர், திடீரென இந்த காட்சியை கண்டார். அவர் செல்பி எடுத்தபடி பயணித்தபோது, இந்த காட்சியையும் வீடியோவாக பதிவு செய்து எக்ஸ் வலைத்தளத்தில் வெளியிட்டார்.
நேற்று காலை 8 மணிக்கு (16.10.2024) வெளியிட்ட வீடியோ பிற்பகலுக்குள் சுமார் 5 லட்சம் பேரால் ரசிக்கப்பட்டு உள்ளது. பறவைகளை துரத்திக்கொண்டு சென்ற நாய், பிரமிடின் உச்சியை அடைந்திருக்கும் என்று கருதப்படுகிறது.
Kidhours – Dog’s achievement in tamil
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.