Sunday, October 20, 2024
Homeசிறுவர் செய்திகள்உலக கின்னஸ் சாதனைப் படைத்த நாய் Tamil kids News Dogs

உலக கின்னஸ் சாதனைப் படைத்த நாய் Tamil kids News Dogs

- Advertisement -

சிறுவர்களுக்கான உலக செய்திகள் Tamil kids News Dogs

- Advertisement -

அமெரிக்காவில் நாய் ஒன்று அதிக நாட்கள் உயிர் வாழ்ந்துவரும் நாயாக கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சிஹுவாஹுவா வகையை சேர்ந்த நாய் ஒன்று 21 வயது 66 நாட்களை கடந்து அதிக நாட்கள் உயிர் வாழ்ந்த நாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

- Advertisement -

இந்த நாய் “உலகின் மிகப் பழமையான நாய்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நாய் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள க்ரீனாக்ரேஸின் கிசெலா ஷோர் (Gisela Shore of Greencross)என்பவருக்கு சொந்தமானது.

- Advertisement -

அவர் நாயை ஷோர் “இனிமையான, மென்மையான மற்றும் அன்பான செல்லப்பிராணி என்று தெரிவித்தார். மேலும், சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கின்னஸ் அமைப்பு பதிவிட்டதை பகிர்ந்த அவர், தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

tamil kids news dogs சிறுவர்களுக்கான உலக செய்திகள்
tamil kids news dogs

சிஹுவாஹுவா சராசரி ஆயுட்காலம் 12 முதல் 18 ஆண்டுகள் வரை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தனது செல்லப்பிராணி 20 வயதை கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பதை தனது உறவினர்களிடமும், நண்பர்களிடமும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகிறார்.

கின்னஸ் உலகசாதனை புத்தகத்தில் இடம்பிடித்த செல்லப்பிராணியின் வீடியோ, இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட நிலையில், தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு17,000 க்கும் மேற்பட்டோர் லைக்குகளை கொடுத்துள்னர்.

 

kidhours  – tamil kids news dogs

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவுஉளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.