Tamil Kids News Discrimination பொது அறிவு – உளச்சார்பு
உலகில் நவீன அடிமைத் தனத்தில் 5 கோடி மக்கள் சிக்கியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கமான சர்வதேச தொழிலாளர் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

சர்வதேச அளவில் தொழிலாளர் உரிமைக்கான அமைப்பான சர்வதேச தொழிலாளர் அமைப்பு தொழிலாளர்கள் சந்திக்கும் ஒடுக்குமுறை குறித்த ஆய்வு விவரங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கடந்த சில ஆண்டுகளாகவே உலகில் நவீன அடிமைத்தளையாக தொழிலாளர்கள் ஒடுக்கப்படுவது அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது.இதற்கு கோவிட்-19 பெருந்தொற்று, போர் சூழல், கால நிலை மாற்றம் போன்றவை முக்கிய காரணிகளாக உள்ளன.
இவற்றின் தாக்கத்தால் வேலை, கல்வி ஆகியவை பாழடைந்து பலர் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் வேறு வழியின்றி இருப்பிடம் விட்டு நீங்கி குடியேற்றம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த ஆறு ஆண்டுகளில் மட்டும் நவீன அடிமைத்தளையில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை சுமார் 93 லட்சம் அதிகரித்துள்ளது.
தற்போதைய புள்ளி விவரப்படி சுமார் 5 கோடி பேர் நவீன அடிமை தளை சிக்கலில் மாட்டியுள்ளனர். இதில் 2.7 கோடி பேர் கட்டாய தொழிலாளர்களாகவும், 2.2 கோடி பெண்கள் கட்டாய திருமண சிக்கலிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சிக்கலில் 33 லட்சம் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
கட்டாய வேலையை பொறுத்தவரை உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தவுள்ள கத்தார் மற்றும் உய்கர் இஸ்லாமியர்கள் மீது அடக்குமுறையை ஏவியுள்ள சீனாவில் தான் இந்த புகார் அதிகம் காணப்படுகின்றன.
அதேபோல், இந்த கட்டாய வேலை மற்றும் திருமண சிக்கல்கள் உயர் அல்லது உயர் நடுத்தர வருவாய் கொண்டு நாடுகளில் அதிகம் காணப்படுகின்றன.
இந்த நாடுகளில் பிரச்சனைக்கு இரையாகுபவர்கள் புலம்பெயர் மக்கள் தான் என ஆய்வு தெரிவிக்கிறது.
கட்டாயத் தொழிலாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் சிறார்கள்.இவர்களில் பலர் பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர். கட்டாயத் திருமணத்தை பொறுத்தவரை அதில் 85 விழுக்காடு திருமணம் குடும்ப அழுத்தத்தால் நிகழ்கிறது.
உலகின் 65 விழுக்காடு கட்டாய திருமணம் ஆசிய-பசிபிக் பிராந்தியத்திலும் அதிலும் குறிப்பாக அரபு நாடுகளிலும் தான் அதிகம் காணப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
kidhours – Tamil Kids News Discrimination
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.