Discover Spiders Movement சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விலங்குகளின் மாறுபட்ட தன்மைகளை நாம் வியந்துள்ளோம் அந்தவகையில்
காட்டு சூழலில், விலங்குகள் அடிக்கடி ஏமாற்று முறைகளை பயன்படுத்தி உயிர் பிழைக்கின்றன. ஒரு புதிய ஆய்வில், சீனா, ஜப்பான், மற்றும் கொரியாவில் காணப்படும் Araneus ventricosus என்ற ஒர்ப்-வீவர் சிலந்தி, ஆண் மின்மினிப்பூச்சிகளின் இனத்தில் இருந்து வரும் ஒளி சிக்னல்களை மாற்றி, அவற்றைப் பிடித்து உணவாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆண் மின்மினிப்பூச்சிகள் தங்கள் துணையை ஈர்க்க இரு மாறுபட்ட ஒளியை காட்டுகின்றன ஆனால் சிலந்தியால் பிடிக்கப்படும் போது, அவை பெண் மின்மினிப்பூச்சிகளைப் போல ஒரு ஒளியை மட்டும் வெளியிடுகின்றன (சிலந்தி ஒளியை மாற்றமடையச்செய்கின்றது ) . இது இன்னும் அதிக ஆண் மின்மினிப்பூச்சிகளை சிலந்தி வலையில் ஈர்க்கிறது.
விஞ்ஞானிகள் சிலந்தியின் நச்சுத்தன்மை இந்த மாற்றத்திற்குப் காரணமாக இருக்கலாம் என நம்புகின்றனர். 2024 ஆகஸ்டில் கரண்ட் பயாலஜி இதழில் இது வெளியிடப்பட்டது.
Kidhours – Discover Spiders Movement
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.