Discover Galaxies சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அவுஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியினால் 6 மிகப்பெரிய புதிய விண்மீன் திரள்களை கண்டுப்பிடித்துள்ளனர்.
இந்த கண்டுப்பிடிப்பின் காரணமாக பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்ற இரகசியம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.எல்லா மனிதருக்குமே இருக்கும் கேள்விதான் நாம் எப்படி எதனால் இந்த உலகிற்கு வந்தோம்? என்பது தான்.
அதனை கண்டுப்பிடிக்க ஒரு ஆழமான ஆராய்ச்சி தேவை. அவ்வாறு நோக்கினால் நாம் சூரியன், சூரியக்குடும்பம், பால்வெளி, பால்வெளி அண்டம் என எல்லாவற்றையும் ஆராயவேண்டும். அவ்வாறான ஆராய்ச்சி நோக்கில் அனுப்பப்பட்டதே ஜேமஸ் வெப் ஆகும்.இதன்படி பிரபஞ்சமானது ஒரு பெரிய வெடிப்பிற்கு பின்னர் அதாவது பிக் பாங் கருதுகோளுக்கு பின்னரே உருவானது என்றுதான் நம் விஞ்ஞானம் நம்புகிறது.
La galaxia más lejana hallada por el telescopio James Webb, bautizada JADES-GS-z13-0, se formó 320 millones de años después del Big Bang y su luz es la más distante observada por los astrónomos. 🔭 https://t.co/iCsHiQTpcH
— Newsweek en Español (@NewsweekEspanol) April 5, 2023
இதன்பின் தான் உலகிலுள்ள அனைத்து உயிர்களும் உருவானது என நம்பப்படுகிறது. ஆகவே இந்த பிக் பாங் கருதுகோளின் உண்மைத்தன்மையை பரிசோதிப்பதே இந்த ஜேம்ஸ் வெப்பின் நோக்கம் ஆகும்.இந்த ஆய்வின் ஒரு பாதியாக புத்தம் புதிய 6 கேலக்ஸிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இதனை தொழில்நுட்ப தவறு என்றே விஞ்ஞானிகள் நினைத்துள்ளனர்.
பின்னர் இதன் உண்மைத்தன்மை தெரியவந்துள்ளத . அவுஸ்திரேலியாவின் ஸ்வீன் பர்ன் கல்லூரியிலுள்ள ஆய்வாளர்களே இதனை கண்டுப்பிடித்துள்ளனர்
Kidhours – Discover Galaxies
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.