Tamil Kids News Disaster உலக காலநிலை
அவுஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருவெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் 50,000கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிட்னி பகுதியில் வெள்ளம் சூழ்ந்த சாலை மற்றும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளில், கார்களில் சிக்கியவர்களை அவசரகால உதவிக் குழுக்கள் ஒரே இரவில் 100 பேரை மீட்டுள்ளனர்.
5 மில்லியன் மக்கள் குடியிருக்கும் சிட்னி நகரில் கடந்த 16 மாதங்களில் நான்காவது முறையாக பெருவெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசாங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியை செயல்படுத்தி, ஒரே இரவில் 23 உள்ளூர் பகுதிகளில் பேரிடரை அறிவித்துள்ளது.மேலும், வெளியேறும் உத்தரவு மற்றும் எச்சரிக்கைகளால் சுமார் 50,000 மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு சிட்னியின் சில பகுதிகள் 24 மணி நேரத்தில் 20 சென்டிமீற்றருக்கு மேல் மழை பெய்துள்ளது,
இது நகரத்தின் ஆண்டு சராசரியில் 17 சதவீதத்திற்கும் அதிகம் என கூறப்படுகிறது. சிட்னியின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் கனமழையின் கடுமையான வானிலை எச்சரிக்கைகள் தொடர்ந்து நீடிக்கின்றன.
ஆனால் புதன்கிழமை மதியத்திற்கு மேல் மழையின் தீவிரம் குறையும் எனவும், இருப்பினும் சாலைகள் மொத்தம் வெள்ளத்தால் மூழ்கியுள்ளதால் மக்கள் கவனத்தில்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.
kidhours – Tamil Kids News Disaster
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.