Saturday, January 18, 2025
Homeசிறுவர் செய்திகள்230 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் கழிவில் புதிய வண்டு இனங்கள் tamil kids...

230 மில்லியன் ஆண்டு பழமையான டைனோசர் கழிவில் புதிய வண்டு இனங்கள் tamil kids news

- Advertisement -

tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

கழிவுப்பொருள் தானே, அதிலே என்ன இருந்து விடப் போகிறது என்ற கோணத்தில் நீங்கள் யோசித்தால், நீங்கள் தொல்லுயிர் ஆய்வாளார்கள் கூறுவதைக் கேட்க வேண்டும். உயிரினத்துக்கு மூதாதையராக கருதப்படும் டைனோசருக்கு மூதாதையர், 230 மில்லியன் ஆண்டுகள் பழமையான, கழிவில் வண்டுகளை கால்கள் மற்றும் ஆண்டெனாக்களை பாதுகாத்து வைத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பாதுகாக்கப்பட்ட வண்டு, வண்டு இனத்தைச் சேர்ந்தது என்றும், ஆனால் இதுவரை அறியப்படாத வண்டுகள் இனத்தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என்பதையும் தெரிவித்துள்ளனர்.
இந்த பாதுகாக்கப்பட்ட கழிவு, ஆராய்ச்சிக்கான புதிய வழிகளை உருவாக்கியுள்ளன. அது மட்டுமின்றி, குறிப்பிட்ட கால அளவைத் தாண்டி, அதற்கு முன்னதாக இருந்த காலத்தில் பூச்சி இனங்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பதைப் பற்றி அறிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக, புதைபடிவ மரப்பிசின், அம்பர்.புதைபடிவ அம்பரில் காணப்படும் இந்த மிகவும் பழமையான பூச்சியின் புதைபடிவங்கள் 140 மில்லியன் ஆண்டுகள் பழமையானவை. இந்நிலையில், புதைபடிவக் கழிவு அதை விட இரண்டு மடங்கு பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது.
செல் பிரஸ் வழங்கிய அறிக்கையின் படி, இந்த ஆய்வின் தலைமை எழுத்தாளர் மார்டின் குவார்ன்ஸ்ட்ரோம் “வண்டுகள் எவ்வளவு அற்புதமாக பாதுகாக்கப்பட்டுள்ளன என்பது பற்றி எனக்கு ஆச்சரியமாக இருந்தது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

குவார்ன்ஸ்ட்ராமின் சர்வதேச விஞ்ஞானிகள் குழு, பாதுகாக்கப்பட்ட புதைப்படிவ வண்டுகளை மாதிரியாகக் கொண்டு ஆய்வு செய்த போது, ​​“திரையில் அந்த வண்டுகளைப் பார்த்த போது, அவை உயிரோடு இருந்து, நேரடியாக உங்களைப் பார்ப்பது போலவே இருந்தது,” என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள், கரண்ட் பயாலஜி ஜூன் 30 ஆம் தேதியிட்ட பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.

- Advertisement -
tamil kids news dinosaur
tamil kids news dinosaur

கண்டுபிடிப்புகள் தற்போதைய உயிரியலில் ஜூன் 30 அன்று வெளியிடப்பட்டன. சிலேசரஸ் ஓபோலென்சிஸ் என்ற டைனோசரின் மூதாதையர், வண்டு இனத்தை தன்னுடைய கழிவில் பாதுகாத்த வந்துள்ளதாகவும், இந்த டைனோசர் இனம், 252 முதல் 201 மில்லியன் ஆண்டுகள் பழமையான ட்ரயாசிக் காலத்தில் வாழ்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
தொல்லுயிர் விஞ்ஞானிகள், பாதுகாக்கப்பட்ட மலத்தை / கழிவை கோப்ரோலைட்டுகள் என்று குறிப்பிடுகின்றனர். எனவே, இந்த புதிய வண்டு இனத்திற்கு, ட்ரையமிக்சா கோப்ரோலிதிகா என்று பெயரிட்டுள்ளனர். இதிலே, மிக்சா என்பது, இந்த வண்டு இனம், மைக்ஸோபாகா என்ற இனத்தோடு தொடர்புடையது என்பதும், இவை ஈரமான சூழமான வாழ்வதையும், பாசியை உண்டு வாழும் இனம் என்பதையும் குறிக்கிறது.

tamil kids news dinosaur
tamil kids news dinosaur

விஞ்ஞானிகள் சின்க்ரோடோன் மைக்ரோடோமோகிராஃபி என்பதைப் பயன்படுத்தினர். எக்ஸ்ரே கதிர்கள் பயன்படுத்தப்பட்டு ஒரு பொருளின் 3d மாடலை உருவாக்க இந்த பயன்முறை உதவியாக உள்ளது. இதன் வழியே, பாதுகாக்கப்பட்ட புதைபடிவ கழிவின் மாதிரியை உருவாக்கப்படுகிறது. ஆராய்ச்சியாளர்களுக்கு இது மிகப்பெரும் வாய்ப்பாக அமைந்துள்ளது என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்த முறையைப் பயன்படுத்தி, ஒரு விலங்கின் கழிவிலிருந்து எண்ணிக்கையில் அடங்காத அளவுக்கு தரவுகளை கண்டுபிடிக்க முடியும் என்றுஆய்வாளார்கள் நம்புகிறார்கள்.

“பண்டைய காலத்தில் இருந்த உணவு முறைகள் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன என்பதையும், காலப்போக்கில் அவை எவ்வாறு மாறியது என்பதையும் கண்டறிய, அவற்றை மீண்டும் கட்டமைக்க கோப்ரோலைட் தரவைப் பயன்படுத்துவதே எங்களின் முதல் குறிக்கோள்” என்று குவார்ன்ஸ்ட்ரோம், அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 

kidhours – tamil kids news

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.