Dell Monitor சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கம்ப்யூட்டர் தயாரிப்பில் முன்னணியில் திகழும் டெல் நிறுவனம் காணொலி கருத்தரங்குகளுக்கு (வீடியோ கான்பரன்ஸ்) உதவும் வகையிலான திரையை உருவாக்கி அறிமுகம் செய்துள்ளது.
தொழில்முறை பணியாளர்களுக்கு உதவும் வகையில் கண்களுக்கு அதிக உறுத்தல் ஏற்படுத்தாதவாறு இதன் வெளிச்சம் மற்றும் கலர் இருக்கும். கண்களுக்கு உறுத்தல் ஏற்படுத்தாத கம்ப்யூட்டர் திரைக்கான சான்றும் பெற்ற மாடல் இதுவாகும். டெல் அல்ட்ராஷார்ப் 27 தண்டர்போல்ட் ஹப்மானிட்டராக இவை வந்துள்ளன. வளைவான தன்மை கொண்ட மானிட்டர்கள் வீடியோ கருத்தரங்குகளுக்கு மிகவும் ஏற்றது.
இதில் 4 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா உள்ளது. செயற்கை நுண்ணறிவு நுட்பம் புகுத்தப் பட்டுள்ளது. இது சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்த்து விடுவதால் காணொலி உரையாடல் தெளிவாகக் கேட்கும். 24 அங்குலம் மற்றும் 27 அங்குல அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Kidhours – Dell Monitor
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.