Friday, January 24, 2025
Homeசிறுவர் செய்திகள்நாசாவின் "டார்ட்" மிஷன் அபார வெற்றி Dart Mission of NASA

நாசாவின் “டார்ட்” மிஷன் அபார வெற்றி Dart Mission of NASA

- Advertisement -

Dart Mission of NASA பொது அறிவு  செய்திகள்

- Advertisement -

விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. இந்த டார்க் மிஷன் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டதாக நாசா அறிவித்து உள்ளது.

கடந்த மாதம் 27ம் தேதி அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி திசை மாறியதா என்ற கேள்வி இருந்து வந்தது.

- Advertisement -
Dart Mission of NASA பொது அறிவு  செய்திகள்
Dart Mission of NASA பொது அறிவு  செய்திகள்

இந்த நிலையில்தான் அந்த விண்கல் சரியாக திசை மாறியதாக நாசா அறிவித்துள்ளது. Double Asteroid Redirection Test (Dart) என்பது விண்கல் பாதை விலக்க சோதனை திட்டம்தான் ஆகும்.

- Advertisement -

எதிர்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கல்லை திசை மாற்றும் விதமாக இப்போதே விண்கல் ஒன்றை திசை மாற்றி சோதனை செய்ய இந்த மிஷன் உருவாக்கப்பட்டது.

Dart மிஷனின் படி பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos என்ற விண்கல்லை நோக்கி Dart ஸ்பேஸ் கிராப்ட் அனுப்பப்பட்டது.

இது பூமிக்கு மிக அருகில் இருக்கும் கொஞ்சம் ஆபத்தான விண்கல். ஆனால் பூமியை மோதும் வாய்ப்பு இல்லை. இந்த Dimorphos அருகிலேயே இருக்கும் Didymos என்ற இன்னொரு விண்கல்லை சுற்றி வருகிறது.

அதாவது Didymos விண்கல்லுக்கு நிலவு போல Dimorphos சுற்றிக்கொண்டு இருக்கிறது. இது பூமியில் இருந்து 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருப்பதால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை.

இந்த 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில் இருக்கும் Dimorphos விண்கல்லைதான் நாசாவின் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் தாக்கி உள்ளது. கடந்த நவம்பர் அன்று விண்ணில் டார்ட் ஸ்பேஸ்கிராப்ட் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் கலிபோர்னியாவில் இருந்து வெற்றிகரமாக முன் ஏவப்பட்டது.

டார்ட் பார்க்க பெரிய சைஸ் கோல்ப் மைதானம் போல இருக்கும். அந்த விண்கல் பார்க்க பிரமிட் அளவில் இருக்கும். இதை கடந்த 27ம் தேதி துல்லியமாக டார்ட் விண்கலம் மோதியது.

Dimorphos அருகே செல்ல செல்ல அதை புகைப்படமாக டார்ட் வெளியிட்டது. முதலில் மங்கலாக புள்ளி போல Dimorphos தெரிந்தது. அதன்பின் டார்ட் அருகே செல்ல செல்ல Dimorphos உருவம் தெளிவாக தெரிந்தது.

கடைசியில் டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் Dimorphos விண்கல்லின் மையத்தில் மிக துல்லியமாக மோதியது. 22,500 வேகத்தில் 690 கிலோ எடை கொண்ட டார்ட் விண்கலம் துல்லியமாக Dimorphosஐ தாக்கி உள்ளது.

73 நிமிடங்களுக்கு மேல் Dimorphos சுற்றும் நேரம் குறைந்தாலோ அது வெற்றி என்றுதான் கருதப்படும். அந்த வகையில் 32 நிமிடங்கள் குறைந்துள்ளதால் இது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது.

எதிர்பார்த்ததை விட 25 மடங்கு அதிக வெற்றியை இது பெற்றுள்ளது. Dimorphos மொத்தமாக 4 சதவிகித மாற்றத்தை தனது சுற்றுவட்டப்பாதையில் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ளது என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, Dimorphosஐ சுற்றும் சாட்டிலைட் ஆகியவை உதவியுடன் இந்த சுற்றுவட்டப்பாதை மாற்றம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்த வெற்றியை மனதில் வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் பூமியை நோக்கி எந்த விண்கல் வந்தாலும் அதை திசை திருப்பிட விடலாம் என்று தப்பு கணக்கு போட கூடாது என்றும் கூறப்பட்டு உள்ளது. ஏனென்றால ஒவ்வொரு விண்கல்லும், ஒவ்வொரு மாதிரி இருக்கும்.

அவை பூமியை நோக்கி வந்தால் அதன் தோற்றம், வலிமை வேறு மாதிரி இருக்கும். அதன் வேகமும் வேறு மாதிரி இருக்கும். இந்த ஒரு ப்ரொஜெக்ட் வெற்றிபெற்றுவிட்டது என்பதால் எதிர்காலத்திலும் எல்லா ப்ரொஜெக்ட்களும் வெற்றிபெறும் என்று சொல்ல முடியாது .

எனவே இதுபோல் இன்னும் பல விண்கற்களின் பாதைகளை மாற்ற வேண்டும். அப்போதுதான் டார்ட் மிஷன் உண்மையில் பயன் அளிக்குமா என்பது தெரிய வரும்!

 

Kidhours – Dart Mission of NASA  , Dart Mission of NASA news , Dart Mission of NASA Update

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு  செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.