Tamil Kids News Dangerous City சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பாகிஸ்தானின் கராச்சி நகரம் உலகின் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
உலகில் வாழ்வதற்கு மோசமான நகரங்கள் பட்டியல் குறித்து பொருளாதார புலனாய்வு பிரிவு என்ற அமைப்பு நடப்பாண்டில் நடத்திய ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
அந்த பட்டியிலில் பாகிஸ்தானின் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட ஐந்து காரணிகளின் அடிப்படையில் 172 நகரங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில் மோசமான வாழ்க்கை நிலை, திருட்டு, கடத்தல், போதைப்பொருள், வன்முறை மற்றும் மோசமான சமூக மற்றும் பொருளாதார நிலை ஆகியவற்றின் அடிப்படையில் உலக அளவில் மிக மோசமான நகரங்கள் பட்டியலில் கராச்சி நகரம் இடம் பிடித்துள்ளது.
குறைந்து வரும் அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவற்றால் பாகிஸ்தான் பொருளாதார சரிவின் விளிம்பில் இருப்பதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் வாழக்கூடிய நகரங்கள் பெரும்பாலும் ஐரோப்பாவிலும் கனடாவிலும் உள்ளன.
நல்ல உள்கட்டமைப்பு மற்றும் ஸ்திரத்தன்மை வாழ்க்கையின் அடிப்படையில் உலகில் வாழ்வதற்கான முதல் 10 இடங்களின் பட்டியலில் ஆஸ்திரியாவின் தலைநகர் வியன்னா முதலிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
kidhours – Tamil Kids News Dangerous City
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.