Tamil Kids News Crisis சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக லெபனானில் வங்கிகள் காலவரையின்றி மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ரூட், மேற்காசிய நாடான லெபனான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்த நாட்டின் மக்கள் தொகையில் 80 சதவீதத்தினர் உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் வாங்க முடியாமல் அல்லாடுகின்றனர்.
லெபனான் பவுண்ட் மதிப்பு வீழ்ச்சி அடைந்து, பணவீக்கம் உயர்ந்ததையடுத்து 2019ஆம் ஆண்டு முதல் வாடிக்கையாளர்கள் வங்கிகளில் இருந்து டொலர்களை திரும்பப்பெறுவதில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் முடக்கப்பட்ட சேமிப்புகளை மீண்டும் எடுத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு வாடிக்கையாளர்கள் வங்கிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவி வந்தது.
ங்கி ஊழியர்களுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் உருவானது. குறிப்பாக ஒரு பெண் போலி துப்பாக்கியுடன் நேற்று முன்தினம் அங்குள்ள வங்கியில் குடும்ப மருத்துவ கட்டணத்தை செலுத்த பணம் கோரியது பதற்றத்தை ஏற்படுத்தியது.
பாதுகாப்பு இல்லாததால் அங்கு வங்கிகளை காலவரையின்றி மூட முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி லெபனான் வங்கிகள் சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அடுத்த அறிவிப்பு வரும்வரையில் அங்கு வங்கிகள் மூடப்பட்டு இருக்கும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது அங்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
Kidhours – Tamil Kids News Crisis
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.