Covidshild about UK in Tamil சிறுவர்களுக்கான உலக செய்திகள்
தற்போது சர்வதேசிய ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திவரும் கொவிஷுல்ட் தடுப்பூசி பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்னும் கருத்துக்கள் பரவி வருகின்றது.
குறித்த அஸ்ட்ரா செனெகா தடுப்பூசி நிறுவனம் முதன்முறையாக நீதிமன்றத் தாக்கல் ஒன்றில், ஒப்புக்கொண்டதாக தி டெலிகிராப் தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசியானது உயிரிழப்புக்கள் மற்றும் உடல் உபாதைகளை ஏற்படுத்தியுள்ளதாக வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகத்தையே அதிரவைத்த 2019 இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் அதன் பிறகு பல்வேறு நாடுகள் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடித்தன.
அந்த வகையில் அஸ்ட்ராஜெனெகா மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து தடுப்பூசியை உருவாக்கியது . இந்த தடுப்பூசி கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் விநியோகிக்கப்பட்டது.
இதற்கிடையில், அஸ்ட்ராஜெனெகாவின் கொரோனா தடுப்பூசியை செலுத்தியதால் தனக்கு மூளை பாதிப்பு ஏற்பட்டதாக ஜேமி ஸ்காட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.இதேபோல் இழப்பீடு கோரி 51 வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது.

அரிதான சந்தர்ப்பங்களில், கொரோனா தடுப்பூசி இரத்தம் உறைதல் மற்றும் குறைந்த பிளேட்லெட் எண்ணிக்கை (டிடிஎஸ்) ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் ஒரு நிலையை ஏற்படுத்தும். ஆனால் இது மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே நடக்கும். எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என குறிப்பிட்டுள்ளது.
Kidhours – Covidshild about UK
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.