Conflict of Tribes சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பப்புவா நியூ கினியா தீவில் பழங்குடி இனத்தவரிடையே ஏற்பட்ட கடும் மோதல் காரணமாக 53 பேர் உயிரிழந்துள்ளனர். அதிக அளவில் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று பழங்குடியினரைச் சேர்ந்த இரண்டு குழுவினருக்கு இடையில் கடும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கியதில் 53 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.இந்த சண்டை அந்த தீவின் எங்கா மாகாணத்தில் நடைபெற்றுள்ளது. நான் பார்த்ததில் இது மிகப்பெரிய மோதல்” என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை “பப்புவா நியூ கினியாவில் இருந்து வந்துள்ள இந்த செய்தி மிகவும் கவலை அளிக்கும் விதமாக உள்ளது” என ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானிஸ் தெரிவித்துள்ளார்.மேலும், “பப்புவா நியூ கினியாவின் பாதுகாப்பிற்காக போலீஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட கணிசமான ஆதரவுகளை அளித்து வருகிறோம்” என்றார். பசிபிக் கடலில் உள்ள ஏராளமான தீவுகளில் வாழ்ந்து வரும் பழங்குடியினர் இன்னும் மனிதத் தொடர்பில் இருந்து விலகி வாழ்ந்து வருகிறார்கள்.
அதேவேளை எங்கா மாகாணத்தில் கடந்த வரும் நடைபெற்ற மோதலில் 60 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Conflict of Tribes
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.