Warning to Citizens உலக காலநிலை செய்திகள்
தற்போது நிலவும் அதிக வெப்பநிலையினால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை தவிர்ப்பதற்காக பின்பற்ற வேண்டிய விசேட அறிவுறுத்தல்களை சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, வீட்டை குளிர்ச்சியாக வைத்திருப்பது மற்றும் வெளிப்புற வெப்பநிலை அதிகரிக்கும் போது ஜன்னல்களை மூடுவது, வெளிப்புற வெப்பநிலை மீண்டும் குறையும் போது ஜன்னல்களைத் திறந்து, தொடர்ந்து குளிர்ந்த நீரில் குளிப்பது போன்ற சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வயோதிபர்கள் அல்லது நோயுற்றவர்கள் மற்றும் சிறு பிள்ளைகள் இந்த நிலைமையின் கீழ் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் என்பதால், அவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென சுகாதார பணியகம் அந்த அறிவிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், அதிக தாகம், வறண்ட உதடுகள், சிறுநீர் அளவு குறைதல், மயக்கம், நோய் அல்லது நீரிழப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
Kidhours – Warning to Citizens
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.