Christmas Santa சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உருவாக்கப்பட்டுள்ள பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் அங்கு வந்த அனைவரையும் கவர்ந்துள்ளது.
இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒவ்வொரு முக்கிய நிகழ்வின்போதும் ஒடிசாவின் பூரி கடற்கரையில் மணற்சிற்பம் அமைப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இவ்வாறான நிலையில், நேற்றையதினம் (25-12-2023) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, பூரி கடற்கரையில் 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் கொண்டு கிறிஸ்துமஸ் தாத்தா மணற்சிற்பத்தை அவர் உருவாக்கியுள்ளமை காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இது தொடர்பில் சுதர்சன் பட்நாயக் கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது பூரி கடற்கரையில் சில வித்தியாசமான சிற்பங்களை உருவாக்குகிறோம்.
இந்நிலையில், இந்த ஆண்டு, 2,000 கிலோ வெங்காயம் மற்றும் மணலைக் காெண்டு, 100 அடி நீளம், 20 அடி உயரம் மற்றும் 40 அடி அகலம் கொண்ட உலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை உருவாக்கியுள்ளோம்.
மேலும், ‘மரக்கன்றை பரிசளிப்பீர்; பூமியை பசுமையாக்குவீர்’ என்ற செய்தியை இதன் மூலம் உலகக்கு உணர்த்துகிறோம்” என்றார்.

இந்த பிரமாண்டமான கிறிஸ்துமஸ் தாத்தா உருவ மணற்சிற்பம் பார்வையாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் அனைவரையும் கவர்ந்து வருகிறமை குறிப்பிடத்தக்கக்து.
Kidhours – Christmas Santa
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.