Tamil Kids News China President சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனா அதிபர் ஜி ஜின்பிங் – வின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் தற்போது வீட்டுக் காவலில் உள்ளதாக இணையத்தில் பெருமளவில் தகவல் வெளியாகும் நிலையில் அதன் உண்மை என்ன என்பதை பார்க்கலாம்.
சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலரும் அதிபருமான ஜி ஜின்பிங் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அவர் தற்போது பெய்ஜிங்கில் வீட்டுக் காவலில் உள்ளார்.
சீனா கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய தலைவர்கள் ஒன்றிணைந்து அவரை பதவியிலிருந்து இறக்கி விட்டனர் என்று சீனா சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் வேகமாகப் பரவியது.
மேலும் இது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பெய்ஜிங்கில் உண்மையில் நடந்தது என்ன என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
சீனா மக்கள் சமூக வலைத்தளத்தில் பெய்ஜிங் பகுதி முழுமையாக ராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு மூடப்பட்டுள்ளது என்று புகார்கள் முன் வைக்கப்படுகிறது.
இதனையடுத்து வந்த தகவல்களில் மத்திய பாதுகாப்பு பணியகத்தின் கட்டுப்பாட்டைச் சீனா முன்னாள் அதிபர் ஹு ஜிண்டோ மற்றும் பிரதமர் வென் ஜிபாவோ இணைந்து எடுத்துக்கொண்டதாகவும் சொல்லப்பட்டது.
மேலும் கடந்த 16ம் தேதி அதிபர் ஜி ஜின்பிங் sco மாநாடு முடித்து பெய்ஜிங் வந்த போது அவரை விமான நிலையத்தில் வைத்தே நுழைய அனுமதி மறுத்து வீட்டுக் காவலில் வைத்துள்ளனர் என்று கூறிவருகின்றனர்.
சீனா மக்கள் சில பெய்ஜிங் வெளிப்பகுதிகளில் தென்படும் ராணுவ வாகனங்களைக் காணொளியாக எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
kidhours – Tamil Kids News China President
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.