China Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்
சீனாவில் நேற்றைய தினம் (30) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்த நாட்டின் நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் அந்த ஆய்வு மையம் மேலும் தெரிவிக்கையில்,
ஜின்ஜியாங் உய்கா் தன்னாட்சிப் பிரதேசம், அக்கி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது.அட்சரேகைக்கு 41.15 டிகிரி வடக்கிலும், தீா்க்கரேகைக்கு 78.67 டிகிரி கிழக்கிலும் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 5.7 அலகுகளாகப் பதிவானது.
அத்துடன் பூமிக்குக் கீழே 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் என்று அந்த ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் இல்லை.
![சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு China Earthquake 1 China Earthquake சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/Untitled-design-2024-01-31T180613.432.jpg)
இருந்தாலும், நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு 2 வாகனங்களில் 10 உறுப்பினா்கள் அடங்கிய மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
Recent Climate – China Earthquake
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.