Children Education சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பிறந்த குழந்தைக்கு ஆரம்பக் கல்வி என்பதே பெருங்கனவு. அங்கு நிலவும் இக்கட்டான சூழல்தான் இதற்கு முதன்மைக்ய காரணம். சுமார் 37 லட்சம் ஆப்கானிய குழந்தைகள்
பள்ளிக்கூடத்தின் வாசனையையே அறியாமல் இருக்கிறார்கள். இதில் 60 சதவீதம் பெண் குழந்தைகள் என்பது குறிப்பிடத் தக்கது. இந்தக் குழந்தைகளின் கல்விக் கனவை நனவாக்கும் முயற்சியில் யுனிசெப்அமைப்பு, தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
தலிபான்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகும் ஒருசில இடங்களில், பெண் குழந்தைகளுக்கும் கல்வி கற்றுக்கொடுக் கும் முயற்சிகளை தொடர்ந்து வருகிறார்கள். அந்தவகையில், பலவிதமான நெருக்கடி மற்றும் அச்சுறுத்தல்களை தாண்டியும், யுனிசெப் அமைப்பு ஆப்கானிஸ்தான் குழந்தை களுக்கு கல்வி பயிற்றுவிக்கிறது.
Kidhours – Children Education
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.