Tuesday, January 21, 2025
Homeகல்விபொது அறிவு - உளச்சார்பு"சாகா வரம்"மாறப்போகும் மனித குலம் Changing Humanity

“சாகா வரம்”மாறப்போகும் மனித குலம் Changing Humanity

- Advertisement -

Changing Humanity பொது அறிவு செய்திகள்

- Advertisement -

இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவார்கள் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானியான 75 வயது ரே குர்ஸ்வேல் இதுவரை 147 முன் கணிப்புகளை வெளியிட்டுள்ளார். இவற்றில் 86 சதவீதம் சரியாக இருந்துள்ளது.

- Advertisement -

2000-ம் ஆண்டுக்குள் செஸ் போட்டியில் மனிதர்களை, கணினிகள் வெல்லும் என இவர் கடந்த 1990-ம் ஆண்டே கூறியிருந்தார். அதேபோல் இணைய வளர்ச்சி, வயர்லெஸ் தொழில்நுட்ப மாற்றம் அதிகளவில் இருக்கும் என இவர் கூறிய முன் கணிப்புகளும் மிகச்சரியாக இருந்தது.

- Advertisement -

சமீபத்தில் வெளியான நேர்காணலில் ரே குர்ஸ்வேல் தெரிவிக்கையில், கடந்த 2005-ம் ஆண்டில் வெளிவந்த `தி சிங்குலாரிட்டி இஸ் நியர்’ என்ற புத்தகத்தில் 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க தொழில்நுட்பம் அனுமதிக்கும் என கூறியிருந்தேன்.

தற்போது மரபியல், ரோபோடிக்ஸ், மற்றும் நானோ தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் மற்றும் விரிவாக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

விரைவில் நரம்புகள் வழியாக செலுத்தப்படும் ‘நானோபோட்ஸ்’ எனப்படும் மிக நுண்ணிய ரோபோக்கள் வரப்போகின்றன.

இவை 50 முதல் 100 நானோ மீற்றர் அகலம்தான் இருக்கும். தற்போது டிஎன்ஏ ஆய்வு, செல் இமேஜிங் பொருட்கள் போன்றவற்றில் நானோபோட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

முதுமை, உடல்நல பாதிப்பில் இருந்து மனிதர்களை காக்கவும், உடலில் உள்ள செல்களை பழுது பார்க்கவும் நானோ ரோபோ உதவும்.

இதனால், 2030-ம் ஆண்டுக்குள் மனிதர்கள் நிரந்தர வாழ்க்கையை அனுபவிக்க இந்த தொழில்நுட்பம் அனுமதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்

 

Kidhours – Changing Humanity

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.