Canada Student Visa சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் பாதக விளைவுகளை ஏற்படுத்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
தற்பொழுது கல்வி கற்று வரும் சர்வதேச மாணவர்கள் இவ்வாறு அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
வீட்டு வாடகை மற்றும் வீட்டு விலைப் பிரச்சினை உள்ளிட்ட சில காரணிகளினால் சர்வதேச மாணவர்களுக்கான வீசா ஒதுக்கீட்டு எண்ணிக்கை மட்டுப்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் அரசாங்கம் இந்த தீர்மானம் தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
எனினும், இந்த நடவடிக்கையினால் வகுப்புக் கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம் எனவும், பல்கலைக்கழகங்களினால் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் எனவும் மாணவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
![கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கான வீசா கட்டுப்பாடுகள் Canada Student Visa 1 Canada Student Visa சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2024/01/Untitled-design-2024-01-28T164817.447.jpg)
ஏற்கனவே பல்கலைக்கழகங்களில் கற்று வரும் வெளிநாட்டு பல்வேறு நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும் என அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.
Kidhours – Canada Student Visa
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.