Bus Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கராச்சியில் இருந்து பாகிஸ்தான் தலைநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று, இன்று அதிகாலை 4.30 மணியளவில் பிண்டிபதான் பகுதியில் ஃபாசிலாபாத் நெடுஞ்சாலையில் சென்ற போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த பிக்அப் வேனில் பயங்கரமாக மோதியது.
மோதிய உடன் பேருந்தில் தீப்பற்றியது. தீ பேருந்து முழுவதும் மளமளவென பரவியது. இதனால் பேருந்து துண்டு துண்டாக வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்கள் மற்றும் குழந்தைகள், பெண்கள் என 18 பேர் உடல் கருகி உயிரிழந்தார்கள்.
பலர் கடுமையான காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
![வெடித்துச் சிதறிய பேருந்து… 18 பேர் உடல் கருகி பலி Bus Fire 1 Bus Fire சிறுவர்களுக்கான உலக செய்திகள்](https://www.kidhours.com/wp-content/uploads/2023/08/Untitled-design_20230823_123006_0000.jpg)
வெகு சிலர் மட்டும் லேசான காயங்களுடன் பேருந்தில் இருந்து வெளியேறி தப்பினர். மோசமான தீக் காயங்கள் பட்ட பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என நெடுஞ்சாலை காவல்துறையின் ஐஜி சுல்தான் கவாஜா கூறியுள்ளார். நின்று கொண்டிருந்த வேனில் 3 பேரல்களில் டீசல் இருந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
விபத்து நேர்ந்ததற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், அதிகாலை என்பதால் பேருந்து ஓட்டுநர் உறங்கி விட்டாரா?அல்லது அதிவேகத்தில் வந்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் ஐஜி சுல்தான் கவாஜா கூறியுள்ளார்.
சாலையேரம் நிறுத்தப்பட்டிருந்த வேனில் பெட்ரோல் இல்லாமல் இருந்திருந்தால் இவ்வளவு மோசமான விபத்து ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் காவல்துறையினர். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் கண்டுபிடிக்கும் பணி நடைபெற்ற வருவதாகவும், உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாகிஸ்தானில் ஓட்டுநர்கள் போக்குவரத்து மற்றும் சாலை விதிகளை கடைப்பிடிப்பதில் மிக மெத்தனமாக இருப்பதாகவும், அதனால் இது போன்ற விபத்துகள் அங்கு அடிக்கடி நிகழும் என்றும் கூறப்படுகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள பாகிஸ்தானின் காபந்து பிரதமர் மொஷின் நக்வி, காயமடைந்தவர்களுக்கு தேவையான மற்றுமு் முழுமையான சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூரில் மாவட்டத்தில் பேருந்து கவிழ்ந்து நிகழ்ந்த விபத்தில் குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்ட ஐந்து பேர் உயிரிழந்தார்கள். மேலும் 20க்கும் மேற்பட்டோர் மிக மோசமாக காயமடைந்தனர். இது போன்ற கொடூரமான விபத்துகளை தவிர்க்க வேண்டும் என்றால் போக்குவரத்து விதிகளை ஓட்டுநர்கள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Kidhours – Bus Fire
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.