Burning into the Water சிறுவர்களுக்கான உலக செய்திகள்
அமெரிக்காவில் மேற்கு நியூயோர்க்கில் ‘செஸ்ட்னட் ரிட்’ என்ற பூங்காவில் ‘எட்டர் னல் பிளேம் பால்ஸ்’ என்ற ஓர் அருவி உள்ளது. 35 அடி உயர இந்த நீர்வீழ்ச்சியில் இருந்து தண்ணீர் கொட்டுகிறது. அதே சமயம், அருவியின் அடிவாரத் தில் உள்ள ஒரு சிறிய குகையில் எப்போதும் தீ எரிந்துகொண்டி ருக்கிறது. தண்ணீர் கொட்டும் இடத்தில் நெருப்புக்கு என்ன வேலை? தீ எப்படி எரியும் என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.
அந்த இடத்தில் பூமிக்கு அடி யில் அதிகளவில் இயற்கை எரிவாயு இருக்கலாம் என்றும் அது சிறிய துவாரம் வழியாக வெளியேறுவதால் தொடர்ந்து தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.
1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழை யின் காரணமாக அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட தால் அந்தத் தீ அணைந்தது. வெள்ளம் வடிந்த பிறகு மீண்டும் தீ எரியத் தொடங்கியது.
இந்த அருவி முக்கிய சுற்றுலாத்தல மாக விளங்குகிறது. இந்த அதி சயத்தை பார்ப்பதற்காக ஏராள மானோர் அங்கு வருகிறார்கள்.
Kidhours – Burning into the Water
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.