Brazil Protest சிறுவர்களுக்கான உலக செய்திகள்
பிரேஸிலின் நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்றம் ஆகியவற்றுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் சுமார் 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோவின்(Jair Bolsonaro) ஆதரவாளர்களான பல்லாயிரக்கணக்கானோர் நேற்று முன்தினம் பிரேஸில் மேற்படி கலவரங்களில் ஈடுபட்டனர்.
பின்னர், நாடாளுமன்றம், ஜனாதிபதி மாளிகை, உச்ச நீதிமன்ற கட்டடங்களை அந்நாட்டுப் பாதுகாப்புப் படையினர் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தனர்.
இந்நிலையில், மேற்படி வன்முறைகளில் ஈடுபட்ட 1,500 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்போதைய ஜனாதிபதி ஜெய்ர் போல்சனரோ (Jair Bolsonaro) தோல்வியுற்றார். அவர் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை.
புதிய ஜனாதிபதியாக லூலா டி சில்வா(Lula de Silva) கடந்த முதலாம் திகதி பதவியேற்பதற்கு முன்னர் அவர் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். புளோரிடா மாநிலத்திலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அடிவயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது கலவரங்களை தான் கண்டிப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேற்படி கலவரங்களை பயங்கரவாத கலவரங்கள் என ஜனாதிபதி லூலா டா சில்வா(Lula de Silva) விமர்சித்துள்ளதுடன், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்
இதேவேளை, வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் பிரசிலியாவில் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நேற்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Brazil Protest
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.
YouTube Channel ” kidhours