Brazil Cyclone Affect
பிரேஸிலில் சூறாவளி காரணமாக குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த வாரம் ரியோ கிராண்ட்டே டோ சுல் மாநிலத்தில் பெய்த கடும் பழை காரணமாக பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின.
சூறாவளியினால் உயிரிழந்த 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநிலத்தின் சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளதுடன் இதில் 4 மாத குழந்தையொன்றும் உயிரிழந்துள்ளது.
அதேவேளை சுமார் 5,000 பேரின் வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 84,000 பேருக்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதகாவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Kidhours
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.