Bomb on Flight சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, இன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜெட்ஸ்டார் விமானம் சனிக்கிழமையன்று டோக்கியோவிற்கு அருகிலுள்ள நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவிற்குப் பயணித்தது. அப்போது அது ஐச்சி மாகாணத்திற்குத் திருப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில் சுபு விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து பயணிகள் அவசர கால ஜன்னல் வழியாக இறங்குவது சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளியில் பதிவாகியுள்ளது.
ஜெட்ஸ்டார் விமானத்தில் பயணிக்க 136 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்துள்ளார்கள்.
இந்த பரபரப்பில் விமானத்தை விட்டு வெளியேறும் போது குறைந்தபட்சம் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக என் எச் கே ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் செய்தி வெளியிட்டுள்ளது.
நரிடா விமான நிலையத்திற்கு ஜப்பான் நேரப்படி காலை 6:20 மணிக்கு ஜேர்மனியில் உள்ள ஒருவரிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், தான் விமானத்தில் வெடிகுண்டு வைத்ததாக ஆங்கிலத்தில் கூறியதாகவும் பொலிஸ் வட்டாரங்களை மேற்கோள் காட்டி என் எச் கே செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும் விமானத்தில் வெடிபொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் என் எச் கே தெரிவித்துள்ளது. மேலும் வெடிகுண்டு மிரட்டல் குறித்த விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Kidhours – Bomb on Flight
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.