Blue Moon சிறுவர்களுக்கான உலக செய்திகள்
நிலவின் சுற்று வட்டப்பாதை மிக குறைவாக இருந்து அதே நேரம் பவுர்ணமியாக நிலவு காட்சியளித்தால் அதனை ப்ளூ மூன் அல்லது நீல நிலவு என்று அழைக்கலாம். அதன்படி நீள் வட்டப்பாதையில் பூமியை நிலவு 4,05,696 கிலோ மீட்டர் தூரத்திலும், சூப்பர் ப்ளூ மூன் தினத்தன்று 3,57,244 கிலோ மீட்டர் தூரத்திலும் பூமியை வலம் வரும்.
அந்த வகையில் இன்று (புதன் கிழமை) சூப்பர் ப்ளூ மூன் எனப்படும் சூப்பர் நீல நிலவு தோன்றி உள்ளது. இதனை நாம் சாதாரணமாக கண்களால் பார்க்கலாம். தொலை நோக்கி எதுவும் தேவையில்லை. வழக்கமாக தோன்றும் பவுர்ணமியை விடவும் நிலவு கூடுதல் வெளிச்சத்துடன் பிரகாசமாக தெரியும்.இந்த மாதத்தில் வரக்கூடிய 2 ஆவது பவுர்ணமியாக இது அமையப் போகிறது. இந்த மாத தொடக்கத்தில் நிலவு பவுர்ணமியாக இருந்தபோது பூமியில் இருந்து 3,57,530 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தது.
நீல நிலவான இன்னும் பூமிக்கு பக்கத்தில் வந்து 3,57,244 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து நிலவு பிரகாசிக்கும்.
இதுபோன்ற நிகழ்வுகள் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்று அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். மழை, மேக மூட்டம் காரணமாக இந்தியாவில் சில பகுதிகளில் ப்ளூ மூன் தென்படவில்லை. உலகின் பல நாடுகளில் ப்ளூ மூன் தோன்றிய நிலையில், பொதுமக்கள் அவற்றை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
உலகின் பல நாடுகளில் சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளங்களில் #BlueSuperMoon என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதற்கிடையே சில இடங்களில் ப்ளூ மூன் சரிவர தென்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Kidhours – Blue Moon
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.