Friday, February 7, 2025
Homeசிறுவர் செய்திகள்ஒரு இரத்த பரிசோதனை போதும் 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய Tamil kids...

ஒரு இரத்த பரிசோதனை போதும் 50 வகையான புற்றுநோயைக் கண்டறிய Tamil kids news

- Advertisement -

Tamil kids news சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

அறிவியல் ஆராய்ச்சிகள் நாள்தோறும் ஆச்சரியங்களை ஏற்படுத்துகின்றன. அதில் ஒன்று தான், ஒரேயொரு ரத்த பரிசோதனையில் 50 க்கும் மேற்பட்ட புற்றுநோய்களைக் கண்டறிய முடியும் என்ற செய்தி. எளிய ரத்த பரிசோதனை ஒன்றை செய்தால், அறிகுறிகளை காட்டுவதற்கு முன்னரே பல புற்றுநோய்களை கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

tamil kids news kidhours siruvar neram (2)
tamil kids news kidhours siruvar neram (2)

கிரெயில், இன்க். (GRAIL, Inc. (California, USA),), என்ற நிறுவனம் ஆராய்ச்சியை மேற்கொண்டது. தற்போது, இந்த ரத்த பரிசோதனை அமெரிக்காவில் மட்டும் பரிந்துரைக்கப்படுகிறது. மார்பகம், கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், நுரையீரல் மற்றும் குடல் புற்றுநோய்களை கண்டறிய இந்த பரிசோதனை அமெரிக்காவில் மேற்கொள்ளப்படுகிறது.

- Advertisement -
tamil kids news kidhours siruvar neram (2)
tamil kids news kidhours siruvar neram (2)

மொத்தத்தில், 134,000 க்கும் மேற்பட்ட நபர்கள் கிரெயிலின் ரத்த பரிசோதனை ஆய்வுகளில் பங்கேற்றுள்ளனர். இந்த ரத்தப் பரிசோதனையில் புற்றுநோய் உடலின் எந்த இடத்தில் உருவாகியிருக்கிறது என்பதையும் காட்டுகிறது.

- Advertisement -

இது நோயறிதல் மற்றும் கவனிப்புக்கான அடுத்த படிகளை தீர்மானிக்க உதவியாக இருக்கும். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்த ரத்தப் பரிசோதனையில் கண்டறியக்கூடிய பல புற்றுநோய்களில் கல்லீரல், கணையம் மற்றும் உணவுக்குழாய் புற்றுநோய் உள்ளிட்ட பலவகை புற்றுநோய்கள் ஆபத்தானவை

ஆனால் இவற்றை கண்டறிய பரிசோதனைகள் இல்லை, இவற்றை, நோயின் ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் அது நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் உதவியாக இருக்கும்.

 

kidhours – Tamil kids news

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.