World Best Tamil Kids பொது அறிவு – உளச்சார்பு
‘நிறக்குருடு’ பிரச்சனையால் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் பற்றி அறிந்திருப்போம். நிறக்குருடு எனப்படும் பார்வையில் வண்ணங்களை பிரித்து பார்க்க முடியாத நிலை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இதனால் பாதிக்கப்பட்டவர்களால் வண்ணங்களை பார்க்க முடியாது, இவர்களால் கருப்பு, வெள்ளை அல்லது சாம்பல் நிற டோன்களில் மட்டுமே உலகத்தை பார்க்க முடியும். குறிப்பாக ஓவியங்களையோ, திரைப்படத்தையோ இவர்களால் ரசிக்க முடியாது.
வண்ணப் பார்வை குறைபாடு கொண்டவர்களும் ஓவியங்களை கண்டு ரசிக்கும் விதமாக ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்று பிரத்யேக கண்ணாடியை வடிவமைத்துள்ளது.
மேற்கத்திய நாடுகளில், 0.4% பெண்களுடன் ஒப்பிடுகையில், 8 முதல் 10 சதவீத ஆண்கள் வண்ணப் பார்வை குறைப்பாடு பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக ஆஸ்திரேலியாவில், இது 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிட்னி பல்கலைக்கழகத்தில் உள்ள சாவ் சாக் விங் அருங்காட்சியகம் (Chau Chak Wing Museum), அமெரிக்க நிறுவனமான என்கிரோமா (EnChroma)என்ற நிறுவனத்துடன் இணைந்து வண்ண குறைபாடு உள்ள பார்வையாளர்களுகாக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கண்ணாடிகளை உருவாக்கியுள்ளது.
இந்த கண்ணாடிகள் பார்வைக் குறைபாடுள்ள நபர்களால் பொதுவாக வேறுபடுத்த முடியாத வண்ணங்களைப் பார்க்க அனுமதிக்கின்றன.
சாவ் சாக் விங் அருங்காட்சியகத்திற்கு வரும் வண்ண பார்வை குறைபாடு உள்ள பார்வையாளர்களுக்கு சிறப்பு கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன. இது அவர்களுக்கு முன்னால் உள்ள ஓவியங்களை சிறப்பாக வேறுபடுத்த அனுமதிக்கிறது.
பெரும்பாலான பார்வை குறைபாடு உள்ளவர்கள் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தை கண்டுபிடிக்க முடியாமல் திண்டாடுவதால், கண்ணாடியும் அதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அருங்காட்சியகத்தின் துணை இயக்குனர் டாக்டர் பால் டோனெல்லி கூறுகையில் “சாவ் சாக் விங் அருங்காட்சியகத்தில் கலை மற்றும் வடிவமைப்பை கண்டு ரசிக்க முக்கியத்துவம் தரப்படுகிறது.
இப்போது ஆஸ்திரேலியாவிற்கு புதிய தொழில்நுட்பத்தை வழங்கும் முதல் இடமாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இந்த கூட்டு முயற்சி எங்கள் உள்ளடக்கிய இலக்குகளில் மற்றொரு முக்கியமான படியாகும்,
வண்ண பார்வை குறைபாடுள்ளவர்கள், எங்களது அருட்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை முழுமையாக ரசிக்க முடியும்” என தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் வண்ண பார்வை குறைப்பாடு உள்ளவர்களுக்கான பிரத்யேக கண்ணாடி கடந்த ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அருட்காட்சியகத்தில் உள்ள ஓவியங்களை கண்டு ரசித்த பார்வை குறைபாடுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலரும், ஓவியங்களின் படைப்பாற்றலையும், அதில் இருந்த நுணுக்கங்களையும், ஆழமான வண்ணங்களையும் பார்த்து ரசிக்க முடிந்ததாக தெரிவித்துள்ளனர்.
என்க்ரோமா வண்ண அணுகல் திட்டத்தின் ஒரு பகுதியாக 2019 முதல் கொலராடோவின் டென்வரில் உள்ள கலை அருங்காட்சியகத்திற்கும் இதுபோன்ற கண்ணாடிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோல் 16 பிற கலாச்சார மையங்களும் வண்ண பார்வை குறைபாடு உள்ள மக்களுக்கு இக்கண்ணாடிகளை வழங்கி வருகின்றன.
மேலும் பல அருட்காட்சியகங்கள் தங்களது இதுபோன்ற வசதிகளைக் கொண்டுவர திட்டமிடாததால், பார்வை குறைபாடு உள்ளவர்கள் அவர்களது வண்ணமயமான கலச்சாரத்தை முழுமையாக கண்டறியமுடியாமல் போகிறது.
ஃபிரான்ஸை தளமாகக் கொண்ட மலாகோஃப் ஹுமானிஸ் ஹேண்டிகேப் (Malakoff Humanis Handicap) என்ற அறக்கட்டளையின் சமீபத்திய அறிக்கையின்படி, விலைகள், கூட்டம் மற்றும் இடங்களின் அணுகல் ஆகியவை பெரும்பாலும் கலாச்சார மையங்களுக்குச் மக்கள் செல்வதை தடுப்பதாகவும்,
சௌ சக் விங் அருங்காட்சியகம் போன்ற அனைத்து பகுதிகளிலும் வித்தியாசமான முயற்சிகளை முன்னெடுத்தால் மக்கள் மத்தியில் புகழ் பெறலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
kidhours – World Best Tamil Kids , World Best Tamil Kids update , World Best Tamil Kids
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.