Sunday, February 16, 2025
Homeசிறுவர் செய்திகள்சுந்தர் பிச்சைக்கு புகழ்மிகு விருது CEO Google awards

சுந்தர் பிச்சைக்கு புகழ்மிகு விருது CEO Google awards

- Advertisement -

awards பொது அறிவு செய்திகள்

- Advertisement -

இந்தியாவின் மிகவும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருது கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைக்கு வழங்கப்பட்டது.

இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி இந்த ஆண்டுக்கான பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டு சமீபத்தில் பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில் சுந்தர் பிச்சைக்கு விருது வழங்கப்படாமல் இருந்தது.

- Advertisement -
World Luxury Cities  சிறுவர்களுக்கான உலக செய்திகள்
World Luxury Cities  சிறுவர்களுக்கான உலக செய்திகள்

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்த விருதை இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான

- Advertisement -

இந்நிலையில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பத்ம பூஷண் விருதை சுந்தர் பிச்சை பெற்று கொண்டார். இந்த விருதை இந்தியா சார்பில் சுந்தர் பிச்சைக்கு அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து வழங்கினார்.

தமிழகத்தின் மதுரையில் பிறந்தவரான சுந்தர் பிச்சை, காரக்பூரில் உள்ள ஐஐடியில் பொறியியல் பட்டம் பெற்றவர். இது தொடர்பாக சுந்தர் பிச்சை கூறுகையில்,

இந்த உயரிய கவுரவத்தை அளித்த இந்திய அரசு மற்றும் மக்களுக்கு மனமார்ந்த நன்றி. இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்துக்கு நன்றி. எனது குடும்பத்தினர் இருக்கும் இந்த வேளையில் பத்ம பூஷண் விருது பெறுவது பெரிய கவுரமாக உள்ளது.

விருது வழங்கிய இந்திய மக்களுக்கும், அரசுக்கும் நன்றி. என்னை செதுக்கிய வடிவமைத்த நாட்டில் இருந்து இந்த கவுரவம் வந்துள்ளது மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்தியா என்னுடன் எப்போதுமே இருக்கும். எங்கே போனாலும் இந்தியாவை என்னுடன் கொண்டு செல்வேன். நான் ஒவ்வொரு முறை இந்தியா வரும் போதும் நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சி என்னை வியக்க வைக்கிறது.

கூகுள் மற்றும் இந்தியா கூட்டுறவை தொடர்ந்து வளர்க்க நான் ஆவலுடன் உள்ளேன். பிரதமர் மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் வளர்ச்சிக்கான உந்துசக்தியாகும். எனவே, வருங்காலத்தில் மாற்றத்தை கொண்டு வர இந்தியாவில் கூகுள் முதலீடு செய்ய தயாராக உள்ளதாகவும் சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.

 

kidhours- awards

 

திருக்குறளின் சிறப்புகள்

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை செய்திகள்

பொது அறிவு செய்திகள்

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

சிறுவர் தொலைக்காட்சி

கல்வி

புவியியல்

சிறுவர் சித்திரம்

மூலிகைகளை சேகரிப்போம்

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.