Artificial Meat சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விலங்குகளின் செல்களில் இருந்து உருவாக்கப்படும் செயற்கை இறைச்சிக்கு அமெரிக்காவில் அனுமதி அளிக்குமாறு இரு நிறுவனங்கள் கோரிக்கை முன்வைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
நாளுக்குநாள் உலகம் முழுவதும் இறைச்சியை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப இறைச்சிக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அதேசமயம் இறைச்சிக்காக விலங்குகளை கொல்லக்கூடாது என்று பல அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.
இவ்வாறான நிலையில் பல்வேறு நாடுகளில் செயற்கை மாட்டு இறைச்சியை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.
விலங்குகளின் உயிரணுக்களில் இருந்து செயற்கை இறைச்சி உருவாக்கப்பட்டுள்ளதுடன் , ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட இறைச்சி குறித்து ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்நிலையில் செயற்கை இறைச்சிக்கு அனுமதி அளிக்கக்கோரி அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இரண்டு நிறுவனங்கள் விண்ணப்பித்தன.
Kidhours – Artificial Meat
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.