Tamil Kids News Apps சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஆப்கானிஸ்தானில் பப்ஜி, டிக்டாக் செயலிகள் தடை செய்யப்படும் என்று தலீபான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு (2021) ஓகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர்.
இதைத்தொடர்ந்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை தலீபான் அரசாங்கம் விதித்து வருகிறது.
மேலும் பல்வேறு இணையதளக்களுக்கும் அங்கு தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதன்படி 23.4 மில்லியன் இணையதளங்கள் ஏற்கனவே ஆப்கனில் தடை செய்யப்பட்டுள்ளன.புதிய பெயர்களில் மீண்டும் அதே தளங்கள் தொடங்கப்படுவதாக அந்நாட்டு தகவல் தொடர்பு அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அடுத்த 3 மாதங்களுக்குள் ஆப்கானிஸ்தானில் டிக்டாக் மற்றும் பப்ஜி பயன்பாடுகளை தடை செய்யப் போவதாக தலீபான் தலைமையிலான தொலைத்தொடர்பு துறையின் அறிவிப்பை மேற்கோள் காட்டி ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
இதன்படி 90 நாட்களுக்குள் ஆப்கானிஸ்தானில் டிக்டாக் மற்றும் பப்ஜி பயன்பாடுகளை தடை செய்ய முடிவு செய்த பாதுகாப்பு துறையின் பிரதிநிதிகள் மற்றும் ஷரியா சட்ட அமலாக்க நிர்வாகத்தின் பிரதிநிதியுடனான சந்திப்பில் தலீபான் அரசு தடையை அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.
மேலும் ஆப்கானிஸ்தானின் தொலைத்தொடர்பு மற்றும் இணைய சேவை வழங்குநர்கள் தடை தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ளதோடு, குறித்த காலத்திற்குள் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
kidhours – Tamil Kids News Apps
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.