Apple Lorry Accident சிறுவர்களுக்கான உலக செய்திகள்
கனடாவில் டொரன்டோ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றினால் அந்த வீதி முழுவதும் ஆப்பிள்கள் கொட்டிச் சிதறியுள்ளன. டிராக்டர் ட்ரெய்லர் வண்டி ஒன்று இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த இந்த வண்டி குடை சாய்ந்ததில் அதில் ஏற்றிச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான ஆப்பிள்கள் வீதியில் சிதறியுள்ளன.இந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வருகின்றன இந்த விபத்து காரணமாக விபத்து இடம்பெற்ற குறித்த வீதி போக்குவரத்திற்கு மூடப்பட்டது.
விபத்தினால் எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஆப்பிள்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இதுவரையில் மதிப்பீடு செய்யப்பட்டு வெளியிடப்படவில்லை.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.