Animals by Spacecraft சிறுவர்களுக்கான உலக செய்திகள்
விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான், தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சுற்றுவட்டப் பாதையில் 130 கிலோ மீற்றர் தொலைவுக்கு அந்த விண்கலம் அனுப்பப்பட்டதாகத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் இஸா சரேபூர் தெரிவித்துள்ளார்.

குறித்த விண்கலத்தில் என்ன விலங்குகள், எத்தனை விலங்குகள் அனுப்பப்பட்டன என்பது தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை.ஈரான் கடந்த 2013இல் விண்கலம் மூலம் குரங்கு ஒன்றினை வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று வரச் செய்ததாகத் தெரிவித்தது.கடந்த செப்டம்பர் மாதத்தில், தரவுகளைச் சேகரிக்கும் செயற்கைக்கோள் ஒன்றினை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாகத் தெரிவித்திருந்தது.
இதேவேளை மனிதர்களை விரைவில் விண்வெளிக்கு அனுப்பும் முயற்சிகளை ஈரான் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Kidhours – Animals by Spacecraft
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.