America Warning to Russia சிறுவர்களுக்கான உலக செய்திகள்
யுக்ரைனின் தலைநகர் உட்பட பல நகரங்கள் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை நடத்தியமைக்கு கடும் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.
முதன்முறையாக ரஷ்யா, யுக்ரைனின் தலைநகர் கியிவ் மீதும் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இந்த தாக்குதல் ‘மிருகதனமானது’ என குறிப்பிட்டுள்ள அமெரிக்கா, இராணுவத்தினர் இல்லாத இலக்குகளை ரஷ்யா தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் யுக்ரைனுக்கு வான் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேலும் உதவிகள் வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை, இந்த தாக்குதல் காரணமாக ஆழ்ந்த அதிர்ச்சியில் இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டேரஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவை க்ரீமியாவுடன் இணைக்கும் முக்கிய பாலத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்துக்கு பதிலளித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து காணொளி ஒன்றை வெளியிட்டுள்ள யுக்ரைன் ஜனாதிபதி, யுக்ரைனை அச்சுறுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளார். நேற்றைய தாக்குதல்களில் 14 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
Kidhours – America Warning to Russia , America Warning to Russianews
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.