Sunday, January 19, 2025
Homeசிறுவர் செய்திகள்அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி பழங்குடி மனிதன் மரணம் Tamil Kids News Amazon Forest...

அமேசான் காட்டில் வாழ்ந்த கடைசி பழங்குடி மனிதன் மரணம் Tamil Kids News Amazon Forest # World Best Tamil

- Advertisement -

Tamil Kids News Amazon Forest சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

உலகின் மிக முக்கியமான பெரிய காடான அமேசான் காட்டில் 100க்கும் மேற்பட்ட பழங்குடி இனங்கள் உள்ளது.

 

- Advertisement -
Tamil Kids News Amazon Forest சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Amazon Forest சிறுவர்களுக்கான உலக செய்திகள்

 

- Advertisement -

அதில் ஒரு இன கூட்டத்தில் ஒருவராக இருந்த இவர் பின்னர் அந்த கூட்டத்தின் உயிர் பிழைத்த ஒரே ஆளானார். பிரேசிலியன் அமேசான் காட்டுப் பகுதியில் இருபது வருடங்களாகத் தனியாக வாழ்ந்து வந்தவர் இவர்.

இவரின் மொத்த கூட்டத்தையும் அமேசான் பகுதிகளை ஆக்கிரமிக்க முயன்றவர்கள் ஆட்களை வைத்து துப்பாக்கியால் கொன்றுவிட்டனர். அதிலிருந்து தப்பிய ஒரே ஆளாக இவர் தனியாக வெளி உலகத்துடன் தொடர்பு இல்லாமல் தனியாகவே வாழ்ந்து வந்துள்ளார்.

காடுகளில் விளையும் பழம், காய்களை உணவாக எடுத்துக்கொண்டும் வேட்டையாடியும் இவரின் வாழ்க்கை சென்றுள்ளது. இவரை “துளை மனிதன்” (man of the hole) என்று அழைக்கின்றனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 23ம் நாள் இறந்த நிலையில் தனாரு பூர்வீகப் பிரதேசம் ( Tanaru Indigenous Territory) என்ற இடத்தில் இஅவரை கண்டறிந்துள்ளனர். இவரின் உடல் மேல் குவாக்காமாயா என்ற பறவையின் இறக்கை போர்வையாக மூடப்பட்டு இருந்தது. மேலும் அவர் இயற்கையான முறையில் தான் இறந்துள்ளார் என்று தெரிவித்துள்ளனர்.

இப்படி ஒரு தனி பழங்குடி மனிதன் பிரேசிலியன் அமேசான் காட்டு பகுதியில் வசிப்பது உலகிற்கு முதலில் தெரியவந்தது ஒரு ஆவணப்படத்தின் (documentary) மூலம் தான்.

1996இல் தனாறு காட்டை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அமல் படுத்த அங்கு இன்னும் பழங்குடியினர் வாழ்கின்றனர் என்று நிறுவிக்கப்பதற்காக ஒரு குழு ஆவணப்படம் எடுக்க அங்குச் சென்றனர்.

அப்போதுதான் இவரை முதன் முதலில் அந்த குழு பார்த்தது. பின்னர் இவரின் இன கூட்டத்தைத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டுவிட்டனர் என்பது தெரியவந்தது.

ஆனால் அந்த மனிதர் இவர்களுடன் பேச ஒப்புக்கொள்ளவில்லை. அவரின் பார்வை மிகவும் கோபத்துடன் வீரியமாக இருந்தது. அப்போது ஆவண குழு பேச முயற்சிக்கையில் அவர் இவர்கள் மேல் அம்பு எய்தினார்.

அதில் குழுவில் ஒருவர் பலத்த காயம் அடைத்தார். எனவே இவருக்கு “துளை மனிதன்” வந்தது
2009இல் “கொரும்பியாரா” என்ற தலைப்பில் அந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது. ஃபனாய் என்று அழைக்கப்படும் தேசிய இந்தியன் அறக்கட்டளை என்ற அரசு அமைப்பு அந்த மனிதரிடம் பேச ழங்குடி நபர் ஒருவரை கூட்டிக்கொண்டு சென்றனர்.

அப்போது அவர் யாரிடமும் பேசப் போவது இல்லை என்று கூறியுள்ளார். தனியாக இருப்பதையே விருப்புவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஃபனாய் அவ்வப்பொழுது கண்காணித்து வந்துள்ளது. அப்போது கடைசியாக 2011ம் ஆண்டு இவர் மரத்தை வெட்டிக்கொண்டிருந்த காட்சிப் பதிவானது. ஆனால் அது 7 வருடம் கழித்தே வெளியிடப்பட்டது.

அதைத் தவிர்த்து அவரின் வீடு, அவர் உருவாக்கிய தோட்டம் மற்றும் அவரின் இருப்பிடத்தைச் சுற்றி இருக்கும் குழிகள் போன்றவை பதிவானது. அவரின் தோட்டத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அவரே விவசாயம் செய்துள்ளார். தற்போது அவர் இறந்த செய்தி உலகளவில் பரவிவருகிறது.

 

kidhours – Tamil Kids News Amazon Forest , Tamil Kids News Amazon Forest human ,Tamil Kids News Amazon Forest life

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.