Saturday, September 21, 2024
Homeசிறுவர் செய்திகள்முடி­யாட்­சியை எதிர்த்த யுவதி Tamil Kids News Against Monarchy UK # World Best...

முடி­யாட்­சியை எதிர்த்த யுவதி Tamil Kids News Against Monarchy UK # World Best Tamil Magazine

- Advertisement -

Tamil Kids News Against Monarchy UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்

- Advertisement -

பிரித்­தா­னி­யாவில் முடி­யாட்­சியை ஒழிக்­கு­மாறு கோரும் பதா­கையை ஏந்தி ஆர்ப்­பாட்டம் நடத்­திய யுவ­தி­யொ­ருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என தெரியவந்துள்ளது.

Tamil Kids News Against Monarchy UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்
Tamil Kids News Against Monarchy UK சிறுவர்களுக்கான உலக செய்திகள்

ஸ்கொட்­லாந்தின் எடின்பேர்க் நகரில் நேற்று முன்­தினம் இச்­சம்­பவம் இடம்­பெற்­றுள்ளதாக தெரியவந்துள்ளது. டின்பேர்க் நகரில் 2 ஆம் எலி­ஸபெத்(Elizabeth) அர­சியின் பூத­வுடல் மக்கள் பார்­வைக்கு வைக்­கப்­ப­ட­வி­ருந்த தேவா­ல­யத்­துக்கு முன் மேற்­படி யுவதி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்டார்.

- Advertisement -

22 வய­தான யுவதி ஒருவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் என பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். அமை­திக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் அவர் கைது செய்­யப்­பட்­டுள்ளார் எனவும் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். மரி­யா­தை­யுடன் செயற்­ப­டு­மாறு அப்­பெண்­ணிடம் கூட்­டத்­தி­லி­ருந்த மக்கள் கோரினர்.

- Advertisement -

எனினும், அவ­ருக்கு ஆத­ர­வாக ஒருவர் சத்­த­மிட்டார். ‘அவரை விட்­டு­வி­டுங்கள். அது கருத்துச் சுதந்­திரம்’ என அந்­நபர் கூறினார் என உள்ளூர் ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.
இதே­வேளை, மன்­ன­ராக 3 ஆம் சார்லஸ்(Charles) உத்­தி­யே­க­பூர்­வ­மாக பிர­க­ட­னப்­ப­டுத்தும் வைபவம் நடை­பெற்ற வேளை­யிலும், ஸ்கொட்­லாந்தின் எடின்பேர்க் மாளி­கைக்கு வெளியே மன்னர் 3 ஆம் சார்ள்­ஸுக்கு(Charles) எதி­ராக கூச்­சல்கள் எழுப்­பப்­பட்­டன.

முடி­யாட்­சிக்கு எதி­ரான நபர்­களால் இக்­கூச்­சல்கள் எழுப்­பப்­பட்­டுள்­ளன. பிரிட்டனில் முடி­யாட்சி ஒழிக்­கப்­பட்டு குடி­ய­ரசு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்டும் என ‘ரிபப்ளிக்’ எனும் அமைப்பு பல வரு­டங்­க­ளக வலி­யு­றுத்தி வரு­கி­றது.

இவ்­வ­மைப்பின் பிர­தம நிறை­வேற்று அதி­காரி கிரஹம் ஸ்மித் வெளி­யிட்­டுள்ள அறிக்கை ஒன்றில், ‘அர­சியின் மறைவு தொடர்பில் மக்கள் பலரின் பிர­தி­ப­லிப்பை நாம் அங்­கீ­க­ரிக்­கிறோம்.

அதே­வேளை மன்னர் சார்ளஸ்(Charles) அரி­யணை ஏறும் இத்­த­ரு­ணத்தில் முடி­யாட்­சியின் எதிர்­காலம் குறித்து பிரிட்டன் விவா­திக்க வேண்­டி­யுள்­ளது’ எனக் குறிப்­பிட்­டுள்ளார். “புதிய மன்னர் தொடர்­பான பிர­க­டனம் ஜன­நா­ய­கத்தை அவ­ம­திப்­ப­தாகும்.

இறு­தி­யாக அரி­யணை ஏறும் நிகழ்வு நடந்த 1952ஆம் ஆண்டின் பின்னர் பிரிட்டன் மிகவும் மாற்­ற­ம­டைந்­து­விட்­டது.

இந்த ஜன­நா­யக சமூ­கத்தில் எமது அரசு தலைவர், விவாதம், அவரின் சட்­ட­பூர்வ தன்மை குறித்த சவால் எது­வு­மின்றி நேர­டி­யாக அப்­ப­த­விக்கு தெரி­வா­கு­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது’ எனவும் கிரஹம் ஸ்மித் குறிப்­பிட்­டுள்ளார்.

எனினும், கடந்த ஜூன் மாதம், 2 ஆம் எலி­ஸபெத் அர­சியின் பவள விழாவை முன்­னிட்டு நடத்­தப்­பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில், 62 சத­வீ­த­மான பிரித்­தா­னி­யர்கள் முடி­யாட்சி நீடிப்பதற்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடியாட்சிக்கு பதிலாக தெரிவு செய்யப்பட்ட அரச தலைவர் வேண்டும் என 22 சதவீதமானவர்கள் தெரிவித்திருந்தனர். 16 சதவீதமானோர் இது தொடர்பில் தமக்கு நிச்சயமில்லை எனக் கூறியிருந்தனர்.

 

kidhours – Tamil Kids News Against Monarchy UK , Tamil Kids News Against Monarchy UK Today , World Best Tamil Magazine

 

திருக்குறளின் சிறப்புகள்

திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு

திருக்குறள் சொல்லும் அம்மா

திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை

தினம் ஒரு திருக்குறள் கற்போம்

சிறுவர்களுக்கான உலக செய்திகள்

சிறுவர் சுகாதாரம்

உலக காலநிலை

பொது அறிவு – உளச்சார்பு

சிறுவர் கட்டுரை

ஆங்கிலம்

பொழுதுபோக்கு

புவியியல்

 

உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Face book

Twitter

Instagram

YouTube Channel ” kidhours 

- Advertisement -
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

error: Content is protected !!

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே!

எமது Facebook இல் இணைந்து

பயன் மிக்க தகவல்களை உடனுக்குடன் அறியுங்கள்.