Achievement of Tamils Company சிறுவர்களுக்கான உலக செய்திகள்
ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாயை ஈட்டும் முதல் இந்திய நிறுவனமாக ஸ்ரீதர் வேம்புவின் ஜோஹோ நிறுவனம் உருவெடுத்துள்ளது.
சென்னையைத் தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் மென்பொருள் நிறுவனமான ஜோஹோ, உலகளாவிய வருவாயில் 1 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது என்றாலும்,

நடப்பு ஆண்டில் அதன் வளர்ச்சி குறையும் என்று நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு தெரிவித்தார்.
மேலும் பயனர்களுக்கு அதிவேக நெட்வொர்க்குகளை வழங்க அடுத்த 5 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 100 நெட்வொர்க் பாயிண்ட்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஜோஹோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.