Tamil Kids News About China சிறுவர்களுக்கான உலக செய்திகள்
எதிரிகளின் ரேடாரால் கண்டறிய முடியாதபடி பயணிக்கும் போர் விமானங்களின் திறனை அதிகரிக்கும் வகையிலான பிளாஸ்மா சாதனத்தை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதிவேகத்தில் பயணிக்கும் குண்டு வீச்சு விமானங்கள் அதன் வேகத்தை நடுவானில் குறைக்கும் போது, காற்றின் வேக மாறுபாடால் விமானம் ஸ்தம்பித்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

இதனை தவிர்க்க, பிளாஸ்மா சவ்வு கொண்ட சாதனம் விமானத்தின் இறக்கைகளில் பயன்படுத்தும் போது, நடுவானில் விமானத்தின் இறக்கைகளில் ஏற்படும் காற்று மாறுபாட்டின் தாக்கத்தை முன்கூட்டியே உணர்ந்து விமானிக்கு அது எச்சரிக்கை செய்கிறது.
மேலும், காற்று மூலக்கூறுகளை மின்னேற்றம் செய்யப்பட்ட துகள்களாக மாற்றி விமானத்தை மிகக்குறைந்த வேகத்திலும் பயணிக்க உதவுகிறது.
இதனால், விமானங்கள் விபத்தில் சிக்காமல் அதிக செயல்திறனுடன் செயல்படுகிறது.
kidhours – Tamil Kids News About China
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.