66 Children Died சிறுவர்களுக்கான உலக செய்திகள்
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அவர்கள் மரணம் அடைந்திருக்கலாம் என உலக சுகாதார அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.
அதில், குழந்தைகளின் உயிரிழப்பிற்கு மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் தயாரித்த நான்கு மருந்துகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்துள்ளது. இந்த தகவலால் உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளது.
இது குறித்து உலக சுகாதார அமைப்பு ட்விட்டர் பக்கத்தில், “காம்பியாவில் அடையாளம் காணப்பட்ட நான்கு கொடிய மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு இன்று மருத்துவ தயாரிப்புக்கு எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கடுமையான சிறுநீரக பிரச்சினை ஏற்படுவதற்கும், 66 குழந்தைகள் உயரிழந்ததற்கும், இந்த 4 மருந்தும் வழிவகை செய்யலாம். இந்த இளம் உயிர்களின் இழப்பு அவர்களது குடும்பங்களுக்கு மனவேதனையை அளித்துள்ளது.
அந்த நான்கு மருந்துகளும் இந்தியாவின் மெய்டன் பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் மூலம் தயாரிக்கப்படுகிறது.
இதனால் அந்த நிறுவனத்திடமும் மற்ற உயரதிகாரிகளுடனும் உலக சுகாதார அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது என குறிப்பிட்டுள்ளது.
LIVE: Media briefing on global health issues with @DrTedros https://t.co/DX6yMxvCkv
— World Health Organization (WHO) (@WHO) October 5, 2022
மேலும் இந்த மருந்து பொருட்கள் இதுவரை காம்பியாவில் மட்டுமே கண்டறியப்பட்டாலும், அவை மற்ற நாடுகளுக்கு விநியோகப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களை தவிர்க்கும் விளைவாக அனைத்து நாடுகளும் இந்த தயாரிப்புகளை கண்டறிந்து அவற்றை புழக்கத்தில் இருந்து அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்த நான்கு மருந்துகளில் ஒவ்வொன்றின் மாதிரிகளையும் பரிசோதனை செய்ததில், அவற்றில் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு டைதிலீன் கிளைகோல் மற்றும் எத்திலீன் கிளைகோல் ஆகியவை இருப்பதை உறுதிப்படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது.
kidhours – 66 Children Died , 66 Children Died news
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு
திருக்குறள் கூறும் நட்பு கட்டுரை
பொது அறிவு – உளச்சார்பு செய்திகள்
உடனுக்குடன் சிறுவர் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.